பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சமத்துவ மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்
திருவொற்றியூரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சமத்துவ மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருவொற்றியூர்,
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில், பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை குறைத்திட மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தி, திருவொற்றியூர் மண்டல அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சமத்துவ மக்கள் கட்சியின் சென்னை மண்டல செயலாளர் டி.மகாலிங்கம் தலைமை தாங்கினார். இதில் இயக்குனர் வேந்தன், புரசை நாகப்பன், ஜி.கே.பெருமாள், ராயபுரம் விஜயன், மணலி பாலா உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தியும், மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும் கோஷமிட்டனர்.
Related Tags :
Next Story