மோட்டார் சைக்கிள் மீது மோதி கால்வாய்க்குள் பாய்ந்த கார்


மோட்டார் சைக்கிள் மீது மோதி கால்வாய்க்குள் பாய்ந்த கார்
x
தினத்தந்தி 1 May 2022 9:44 PM IST (Updated: 1 May 2022 9:44 PM IST)
t-max-icont-min-icon

ேமாட்டார் சைக்கிள் மீது மோதி கால்வாய்க்குள் கார் பாய்ந்தது.

பரமக்குடி, 
பரமக்குடி அருகே ேமாட்டார் சைக்கிள் மீது மோதி கால்வாய்க்குள் கார் பாய்ந்தது. இந்த விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். 
கால்வாய்க்குள் பாய்ந்தது 
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் பால கருப்பையா. இவருடைய மகன் நித்தின் பரத் நேற்று மோட்டார் சைக்கிளில் முதுகுளத்தூரில் இருந்து பரமக்குடிக்கு நான்கு வழிச்சாலையில் வந்துள்ளார். பாம்புவிழுந்தான் அருகே வந்து கொண்டிருந்தபோது ராமேசுவரத்தில் இருந்து குருவாயூர் நோக்கி சென்ற கார் நித்தின் பரத் வந்த மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் நித்தின் பரத் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். மேலும் மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த கால்வாய்க்குள் பாய்ந்து கவிழ்ந்தது. 
6 பேர் படுகாயம் 
இதில் காருக்குள் இருந்த கேரளா மாநிலம் குருவாயூரை சேர்ந்த கேசவன்(49), கமிதா(38), அதிரி ஜா(15), பவித்ரா(13), சமாஷா(10) ஆகிய 5 பேரும் படுகாயம் அடைந்தனர். விபத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த 6 பேரையும் மீட்டு பரமக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
இந்த விபத்து குறித்து எமனேஸ்வரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story