விபத்தில் விவசாயி பலி
கயத்தாறு அருகே நடந்த விபத்தில் விவசாயி பலியானார்.
கயத்தாறு:
கயத்தாறு அருகே உள்ள திருமங்களக்குறிச்சி வடக்கு தெருவைச் சேர்ந்த ராமசாமி மகன் சுப்பிரமணியன் (வயது 47). விவசாயி. இவர் கோவில்பட்டிக்கு மோட்டார்சைக்கிளில் தனது நண்பர் முருகன் என்பவருடன் சென்று கொண்டிருந்தார். பின்னர் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.
கயத்தாறு அருகே தளவாய்புரம் நாற்கர சாலையில் வந்தபோது அந்த வழியாக நெல்லை கருப்பந்துறையை சேர்ந்த சின்னப்பன் மகன் பிலிப் (42) என்பவர் மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். திடீரென சுப்பிரமணியன் மோட்டார்சைக்கிள் மீது பிலிப் மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் சுப்பிரமணியன் படுகாயம் அடைந்தார். பின்னர் அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சுப்பிரமணியன் இறந்தார். முருகனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இது குறித்து கயத்தாறு இன்ஸ்பெக்டர் முத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இறந்து போன சுப்பிரமணியனுக்கு வசந்தி என்ற மனைவியும், காயத்ரி என்ற மகளும் உள்ளனர்.
Related Tags :
Next Story