விபத்தில் 2 பேர் பலி
விபத்தில் 2 பேர் பலி
பல்லடம்:
பல்லடம் அருகே வேன்-கார் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் பலியானார்கள். 8 பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவிலுக்கு சென்றனர்
திருப்பூர் ராக்கியாபாளையத்தை சேர்ந்தவர் பேச்சியப்பன் என்கிற கார்த்திக் (வயது 30). அதே பகுதியை சேர்ந்த இவரது உறவினர் கார்மேகம் (33). கார்மேகத்தின் தாயார் பழனியம்மாள்(55) மற்றும் உறவினர்கள் பாக்கியலட்சுமி(52), தேன்மொழி(33), கலைமணி(22), ராமச்சந்திரன்(33).
இவர்கள் அனைவரும் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு குளத்துப்பாளையத்தில் உள்ள மாகாளியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி கார்த்திக்கிற்கு சொந்தமான வேனில் கார்த்திக், கார்மேகம், பழனியம்மாள், பாக்கியலட்சுமி, தேன்மொழி, கலைமணி, ராமச்சந்திரன் ஆகியோர் குளத்துப்பாளையம் கோவிலுக்கு நேற்று முன்தினம் சென்றனர். பின்னர் அங்கு சாமி கும்பிட்டுவிட்டு நேற்று அதிகாலை மீண்டும் திருப்பூருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.
2 பேர் பலி
வேனை கார்த்திக் ஓட்டி வந்தார். இவர்களது வேன் பல்லடம் - பொள்ளாச்சி மெயின் ரோட்டில் வெங்கிட்டாபுரம் அருகே வந்தது. அப்போது வேனுக்கு முன்னால் லாரி ஒன்று சென்றது. அந்த லாரியை முந்தி செல்ல கார்த்திக் முயன்றுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த கார் மீது வேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் வேனின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. வேனை ஓட்டிய கார்த்திக், முன் பக்கத்தில் அமர்ந்திருந்த கார்மேகம் ஆகியோர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
8 பேர் காயம்
மேலும் வேனுக்குள் இருந்த பழனியம்மாள், பாக்கியலட்சுமி, தேன்மொழி, கலைமணி, ராமச்சந்திரன் மற்றும் காரில் வந்த பாதிரியார் யூஜின் டோனி, பெலிக்ஸ், கலையரசன் ஆகியோரும் காயம் அடைந்தனர். இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் பல்லடம் ேபாலீசாரும், அருகில் உள்ளவர்களும் விரைந்து வந்து காயம் அடைந்த 8 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
உயிரிழந்த கார்த்திக் மற்றும் கார்மேகம் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story