மாட்டு வண்டி போட்டி
விளாத்திகுளம் அருகே மாட்டு வண்டி போட்டி நடந்தது.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே, மாட்டு வண்டி போட்டி நடந்தது.
மாட்டு வண்டி போட்டி
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூரில் மாமன்னர் திருமலை நாயக்கரின் 439-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மூன்றாம் ஆண்டு மாட்டு வண்டி போட்டி நடைபெற்றது.
இதில் நெல்லை, மதுரை, தேனி, தஞ்சை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து சுமார் 35 ஜோடி மாடுகள் பங்கேற்றன. பெரிய மாடு, பூஞ்சிட்டு என இரு பிரிவுகளாக போட்டி நடைபெற்றது. 14 கிலோ மீட்டர் தூரம் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பரிசு
பெரிய மாட்டு வண்டி போட்டியில் நெல்லை மாவட்டம் சீவலப்பேரி துர்காம்பிகை மாட்டு வண்டி முதலிடத்தையும், தூத்துக்குடி சண்முகபுரம் மெடிக்கல் விஜயகுமார் மாட்டு வண்டி இரண்டாவது இடத்தையும், நெல்லை வேலங்குளம் கண்ணன் என்பவரின் வண்டி மூன்றாவது இடத்தை பிடித்தன.
10 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டியில் தேனி மருது சகோதரர்கள் சேனை மாட்டு வண்டி முதலிடத்தையும், இரண்டாவது இடத்தை தஞ்சையும், மூன்றாவது இடத்தை மதுரை மாவட்ட மாட்டு வண்டியும் பிடித்தன.
சீறிச்சென்ற காளைகளை சாலையின் இருபுறமும் ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாட்டுவண்டி உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் பரிசுத்தொகை மற்றும் டி.வி. உள்பட பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன.
Related Tags :
Next Story