புகையிலை பொருட்களுடன் 3 பேர் கைது
எட்டயபுரம் அருகே, புகையிலை பொருட்களுடன் 3 பேர் கைது செய்யப்பட்டனர். காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
எட்டயபுரம்:
எட்டயபுரம் அருகே, புகையிலை பொருட்களுடன் 3 பேர் கைது செய்யப்பட்டனர். காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
ரோந்து
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவுப்படி, விளாத்திகுளம் துணை சூப்பிரண்டு பிரகாஷ் மேற்பார்வையில், எட்டயபுரம் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர்முகம்மது தலைமையிலான போலீசார் இளம்புவனம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த காரை சோதனை செய்தனர். அதில், மேல செய்த்தலை கிழக்குத் தெருவை சேர்ந்த முனீஸ்வரன் மகன் செல்வம் (வயது 38), மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த இருதயம் மகன் மைக்கேல்ராஜ் (43), மேல நம்பிபுரம் பகுதியை சேர்ந்த கணிராஜ் மகன் அஜித்குமார் (24) ஆகியோர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை 17 மூட்டைகளில் சட்டவிரோதமாக விற்பனைக்காக காரில் வைத்திருந்தது தெரியவந்தது.
கைது
இதைத்தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்த ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களையும், சட்டவிரோதமாக விற்பனைக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story