89 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை நடவடிக்கை
89 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை நடவடிக்கை
திருப்பூர்,:
சென்னை தொழிலாளர் ஆணையாளர் அதுல் ஆனந்த் அறிவுரையின்படி, கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையாளர் பொன்னுசாமி, இணை ஆணையாளர் லீலாவதி மேற்பார்வையில், திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) மலர்க்கொடி தலைமையில் தொழிலாளர் துணை, உதவி ஆய்வாளர்கள் திருப்பூர் மாவட்டம் முழுவதும்உள்ள நிறுவனங்களில் மே தினத்தையொட்டி நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.மே தினத்தில் பணிக்கு அமர்த்திய தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும். அல்லது சம்பளத்துடன் மாற்று விடுமுறை அளிக்க வேண்டும். இதுதொடர்பாக தொழிலாளர்களின் சம்மதத்துடன் சம்பந்தப்பட்ட தொழிலாளர் துணை, உதவி ஆய்வாளர்களுக்கு முன் கூட்டியே விவரம் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் நேற்று தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தி இருந்த மொத்தம் 96 நிறுவனங்களில் ஆய்வு செய்தபோது தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 89 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டு வேலையளிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
Related Tags :
Next Story