மது பதுக்கி விற்ற 9 பேர் கைது
மது பதுக்கி விற்பனை செய்த 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
சாயல்குடி,
மது பதுக்கி விற்பனை செய்த 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 249 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
போலீசார் சோதனை
சாயல்குடி பகுதியில் மே தினத்தை முன்னிட்டு சாயல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா, சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன், ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில் போலீசார் சாயல்குடி பஜார் பகுதி மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் வாகன சோதனை மேற்கொண்டிருந்தனர். அப்போது சிலர் சட்ட விரோதமாக மது பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து வில்லனேந்தல் கிராமத்தை சேர்ந்த செந்தூர்பாண்டி (வயது 50) என்பவரிடம் இருந்து 17 மதுபாட்டில்கள், அல்லிக்குளம் கிராமத்தை சேர்ந்த பாலமுருகனிடம் (40) 20 மதுபாட்டில்கள், மூக்கையூர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (55) என்பவரிடம் இருந்து 20 மதுபாட்டில்கள், கன்னிகாபுரம் கிராமத்தை சேர்ந்த தொம்மை ஆரோக்கியம் (60) என்பவரிடம் இருந்து 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
249 மது பாட்டில்கள் பறிமுதல்
அதே போல கடுகு சந்தை சத்திரம் பகுதியை சேர்ந்த முத்து ராமலிங்கத்திடம் (60) இருந்து 22 மதுபாட்டில்கள், சாயல்குடி பகுதியை சேர்ந்த சிவஞானத்திடம் (45) இருந்து 50 மதுபாட்டில்கள், பிழை பொருத்த அம்மன்குடியிருப்பு பகுதியை சேர்ந்த தங்கதுரையிடம் (45) இருந்து 70 மதுபாட்டில்கள், கீழச் செல்வனூர் கிராமத்தை சேர்ந்த கண்ணன் (40) என்பவரிடம் இருந்து 20 மதுபாட்டில்கள், உசிலங்குளம் கிராமத்தை சேர்ந்த ஸ்டாலின் (35) என்பவரிடம் இருந்த 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 249 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் அவர்கள் 9 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story