வாலிபர் கொலையில் 6 பேர் கைத; பழிக்கு, பழியாக தீர்த்துக்கட்டியது அம்பலம்


வாலிபர் கொலையில் 6 பேர் கைத; பழிக்கு, பழியாக தீர்த்துக்கட்டியது அம்பலம்
x
தினத்தந்தி 1 May 2022 10:02 PM IST (Updated: 1 May 2022 10:02 PM IST)
t-max-icont-min-icon

வாலிபர் கொலையில் 6 பேர் கைது செய்யபபட்டனர்

பெங்களூரு: பெங்களூரு கெங்கேரி பகுதியில் வசித்து வந்தவர் பரத்(வயது 24). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம்(ஏப்ரல்) 24-ந் தேதி இரவு பரத்தும், அவரது நண்பர் சரத்தும் கெங்கேரியில் நடந்த கரக திருவிழாவில் கலந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றனர். அப்போது மோட்டார் சைக்கிளை வழிமறித்த மர்மநபர்கள் பரத், சரத் ஆகியோரிடம் தகராறு செய்தனர். 

பின்னர் பரத்தையும், சரத்தையும் மர்மநபர்கள் ஆயுதங்களால் தாக்கினர். இதில் சரத் தப்பி ஓடிவிட்டார். பரத்தை மர்மநபர்கள் ஆயுதங்களால் தாக்கி கொலை செய்ததுடன் அவரது உடலை ரெயில் தண்டவாளத்தில் வீசி சென்றனர். இந்த கொலை சம்பவம் குறித்து கெங்கேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் பரத்தை கொலை செய்ததாக 6 பேரை கெங்கேரி போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். விசாரணையில் கைதானவர்களின் நண்பர் ஒருவரை சரத் கொலை செய்து இருந்தார். இதனால் பழிக்குப்பழியாக சரத்தின் நண்பர் பரத் கொலை ெசய்யப்பட்டது தெரியவந்தது. 

Next Story