குடியாத்தம் பகுதியில் சூறைக்காற்றுடன் மழை


குடியாத்தம் பகுதியில் சூறைக்காற்றுடன் மழை
x
தினத்தந்தி 1 May 2022 10:11 PM IST (Updated: 1 May 2022 10:11 PM IST)
t-max-icont-min-icon

குடியாத்தம் பகுதியில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. அப்போது மரம் விழுந்து பெண் காயமடைந்தார்.

குடியாத்தம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் திடீரென சிறிதுநேரம் சூறைக் காற்றுடன் மழை பெய்தது. இதனால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தது. குடியாத்தம் அடுத்த சென்ராம்பள்ளி பகுதியில் பெரிய புளியமரம் ஒன்று விவசாயி ரவி என்பவரின் வீட்டின் மீது விழுந்தது. 

இதில் ரவியின் மனைவி குமாரி (வயது 50) பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வீட்டில் குமாரியின் பேரன்கள் யோகித் (4), குபேந்திரன் (1½) ஆகியோர் சிக்கி கொண்டனர். அவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 
தகவல் அறிந்ததும் குடியாத்தம் தீயணைப்பு நிலைய அலுவலர் லோகநாதன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று வீட்டின் மீது விழுந்த மரத்தை எந்திரங்கள் கொண்டு அறுத்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

Next Story