பிளாஸ்டிக் பயன்படுத்த தடை
பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பனைக்குளம்,
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பட்டணம்காத்தான் கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா மருது தலைமை தாங்கினார். கூட்டத்தில் பார்வையாளராக தனித்துணை ஆட்சியர் கந்தசாமி, விரிவாக்க அலுவலர் பிரேமா கலந்து கொண்டனர். இதில் மண்டபம் ஒன்றிய கவுன்சிலர்கள் அ.தி.மு.க. ஆர்.ஜி.மருது பாண்டியன், பா.ஜ.க. முருகன், கிராம நிர்வாக அலுவலர் தேவகி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். பட்டணம்காத்தான் ஊராட்சி செயலர் நாகேந்திரன் ஊராட்சியின் வரவு செலவு கணக்குகளை வாசித்தார். மேலும் 2022-23 ஆண்டிற்குரிய விதியின் கீழ் ஊராட்சி பகுதியில் செய்யப்படக்கூடிய பணிகள் குறித்து தேர்வு செய்யப்பட்டன. பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த முற்றிலும் தடை செய்ய கிராம சபையில் அங்கீகரிக்கப்பட்டது. தொடர்ந்து கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஓம் சக்தி நகர் தொடக்்கப் பள்ளி தலைமையாசிரியர் ராபர்ட் ஜெயராஜ், ராம்நகர் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் நேவிகா பாரதமணி, பட்டணம்காத்தான் பள்ளி ஆசிரியர் நிர்மலா ஜெபமணி, மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் சித்ராதேவி, சிறப்பு சார்பு ஆய்வாளர் மாதவன், கிராம சுகாதார செவிலியர்கள் விஜயலட்சுமி, காங்கேஸ்வரி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வினோத், உறுப்பினர்கள் ராஜேந்திரன், குழந்தை ராணி, ராணி கண்ணன், ரேணுகா, கண்ணன், நாக சவுந்தரம், முரளி, பாரதி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் நாகேந்திரன் செய்திருந்தார்.
Related Tags :
Next Story