தொழிலாளர் தினத்தையொட்டி தேசிய அடையாள அட்டை பெற இலவசமாக ஆன்லைனில் பதிவு


தொழிலாளர் தினத்தையொட்டி தேசிய அடையாள அட்டை பெற இலவசமாக ஆன்லைனில் பதிவு
x
தினத்தந்தி 1 May 2022 10:29 PM IST (Updated: 1 May 2022 10:29 PM IST)
t-max-icont-min-icon

தொழிலாளர் தினத்தையொட்டி தேசிய அடையாள அட்டை பெற இலவசமாக ஆன்லைனில் பதிவு

நாமக்கல்:
நாமக்கல்லில் தொழிலாளர் தினத்தையொட்டி இணைந்த கைகள் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் நலவாரிய திட்டங்களுக்கான இலவச சேவை முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமுக்கு மண்டல பொதுச்செயலாளர் ஷேக்தாவூத் தலைமை தாங்கினார். மண்டல தலைவர் பெருமாள் முகாமை தொடங்கி வைத்தார்.
இந்த முகாமில் சுமார் 100 தொழிலாளர்களுக்கு அமைப்புசாரா தேசிய அடையாள அட்டை, மருத்துவ காப்பீடு அட்டை, ஆயுள் சான்று, கட்டுமான தொழிலாளர்களுக்கான வீடு கட்டும் விண்ணப்பம் பதிவு செய்தல், கல்வி உதவித்தொகை, ஆதார் சேவை, குடும்ப அட்டை பெறுதல் என அனைத்தும் ஆன்லைனில் இலவசமாக பதிவு செய்து கொடுக்கப்பட்டது. இதில் மண்டல பொருளாளர் நிர்மலா, துணை தலைவர் மூர்த்தி, செயற்குழு உறுப்பினர் தேசிங்கு, மாவட்ட செயலாளர் சுரேஷ், ஒன்றிய தலைவர் தியாகராஜன், நகர தலைவர் அக்பர் பாஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story