பொதுத்தேர்வுக்கான வினாத்தாள் வைக்கப்பட்டுள்ள 14 மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
பொதுத்தேர்வுக்கான வினாத்தாள் வைக்கப்பட்டுள்ள 14 மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வேலூர்
தமிழகத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கு வருகிற 5-ந்தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு 6-ந்தேதியும், பிளஸ்-1 மாணவர்களுக்கு 10-ந்தேதியும் பொதுத்தேர்வுகள் தொடங்கி நடைபெற உள்ளது. இதற்காக அரசு தேர்வுகள்துறை மூலம் வினாத்தாள்கள் அச்சிடப்பட்டு மாவட்டம் வாரியாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 18,929 மாணவர்களும், பிளஸ்-1 தேர்வை 16,957 மாணவர்களும், பிளஸ்-2 தேர்வை 16,107 மாணவர்கள் என்று மொத்தம் 51,993 மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர். இதற்காக 172 தேர்வு மையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான முதற்கட்ட வினாத்தாள் வேலூர் மாவட்டத்துக்கு வந்துள்ளன. பிளஸ்-2 மாணவர்களுக்கு முதல் 3 தேர்வுகளுக்கும், பிளஸ்-1 மாணவர்களுக்கு முதல் 2 தேர்வுகளுக்கும், எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு முதல் தேர்விற்கான வினாத்தாள்கள் வந்துள்ளன. வினாத்தாள்கள் 14 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. வினாத்தாள் வைக்கப்பட்டுள்ள அறைகள் 'சீல்' வைக்கப்பட்டு, அதற்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story