மராட்டியத்தில் புதிதாக 169 பேருக்கு கொரோனா
மராட்டிய மாநிலத்தில் புதிதாக 169 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது.
மும்பை,
மராட்டியத்தில் இன்று புதிதாக 169 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 78 லட்சத்து 77 ஆயிரத்து 901 ஆக உயர்ந்துள்ளது. நேற்று நடத்திய பரிசோதனையில் 155 பேருக்கு தொற்று இருந்த நிலையில் தற்போது எண்ணிக்கை உயர்ந்து கொண்டு வருகிறது. கொரோனா தொற்று பாதித்த 172 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
இருப்பினும் மாநிலத்தில் இன்று கொரோனாவிற்கு யாரும் பலியாக வில்லை. இதுவரை மாநிலத்தில் 1 லட்சத்து 47 ஆயிரத்து 843 பேர் பலியாகி உள்ளனர். மாநிலம் முழுவதும் தற்போது 995 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா மீட்பு விகிதம் 98.11 ஆகவும், இறப்பு விகிதம் 1.87 ஆகவும் உள்ளது.
Related Tags :
Next Story