துப்புரவு பணியாளர்கள் கொடியேற்றி ஆர்ப்பாட்டம்
மே தினத்தை முன்னிட்டு துப்புரவு பணியாளர்கள் கொடியேற்றி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகராட்சி துப்புரவு பணியாளர்கள் சங்கம் ஏ.ஐ.டி.யு.சி. மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, திருப்பத்தூர் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சி.ஐ.டி.யு. சங்கங்கள் சார்பில் திருப்பத்தூர் நகராட்சி அலுவலகம் முன்பு கொடியேற்றி கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருப்பத்தூர் நகர துப்புரவு பணியாளர் சங்க தலைவர் பி.வெங்கடேசன் தலைமை தாங்கினார். ஆறுமுகம் வரவேற்றார், செயலாளர் ரவி, பொருளாளர் கோபி முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் எம்.சுந்தரேசன் கொடியேற்றி வைத்து பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் கே.ஆர்.வேணுகோபால், மயில்வாகனன், ஆனந்தன் உள்பட ஏராளமான துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
சி.ஐ.டி.யு. சார்பில் கொடியேற்றி இனிப்பு வழங்கும் நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க தலைவர் சி.பொன்னுசாமி, மாவட்டச் செயலாளர் எம்.சரவணன், துணைத்தலைவர் சங்கர், துணைச் செயலாளர் தமிழரசன், மாவட்ட துணைத்தலைவர் டி.சின்னண்ணன், நகர இளைஞரணி இரகுநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நகரமன்ற உறுப்பினர் ஆர்.பவானி துப்புரவு பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கி பேசினார்.
பின்னர் திருப்பத்தூர் நகராட்சியில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஒப்பந்த தொழிலாளர் முறையை கைவிட வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story