34 ஊராட்சிகளில் மே தின கிராம சபை கூட்டம்


34 ஊராட்சிகளில் மே தின கிராம சபை கூட்டம்
x
தினத்தந்தி 2 May 2022 12:15 AM IST (Updated: 1 May 2022 11:09 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் ஒன்றியத்தில் 34 ஊராட்சிகளில் மே தினத்தையொட்டி கிராமசபை கூட்டம் நடந்தது.

திருவாரூர்:-

திருவாரூர் ஒன்றியத்தில் 34 ஊராட்சிகளில் மே தினத்தையொட்டி கிராமசபை கூட்டம் நடந்தது. 

கிராமசபை கூட்டம்

மேதின கிராம சபை கூட்டம் நேற்று திருவாரூர் ஒன்றியத்தில் உள்ள 34 ஊராட்சிகளிலும் நடந்தது. இதில் பின்னவாசல் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் தேவா கலந்து கொண்டு பேசினார். 
இதில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கருணாகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் புவனேஸ்வரி, ஒன்றியக்குழு உறுப்பினர் லலிதா கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புலிவலம் ஊராட்சி

இதேபோல் புலிவலம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் காளிமுத்து தலைமையிலும், திருநெய்ப்பேர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்குமார் தலைமையிலும், மாங்குடி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா குருசாமி தலைமையிலும் கிராமசபை கூட்டம் நடந்தது. தண்டலை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். இதில் கிராமப்புற வளர்ச்சி திட்டங்கள், சாலை, குடிநீர் உள்ளிட்ட தேவைகள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது. 

Next Story