ஜோலார்பேட்டையில் இருந்து ஈரோட்டுக்கு 2 ஆண்டுகளுக்கு பிறகு பயணிகள் ரெயில் இயக்கம்
ஜோலார்பேட்டையில் இருந்து ஈரோடு வரை செல்லும் பயணிகள் ரெயில் 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (திங்கட்கிழமை) முதல்) இயக்கப்படுகிறது.
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டையில் இருந்து ஈரோடு வரை செல்லும் பயணிகள் ரெயில் 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (திங்கட்கிழமை) முதல்) இயக்கப்படுகிறது.
மீண்டும் பயணிகள் ரெயில்
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. தற்போது கொரோனா தொற்று குறைந்து விட்டதன் காரணமாக ரத்து செய்யப்பட்ட பல்வேறு ரெயில்கள் மீண்டும் இயக்கப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ஈரோடு வரை செல்லும் பயணிகள் ரெயில் மீண்டும் இயக்கப்படாமல் இருந்தது.
ரெயில் பயணிகளும், பொதுமக்களும் மீண்டும் ஈரோடு பயணிகள் ரெயிலை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று தென்னக ரெயில்வே ஜோலார்பேட்டையில் இருந்து ஈரோடு வரை செல்லும் பயணிகள் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலாக இன்று (திங்கட்கிழமை) முதல் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து முன்பதிவு இல்லாமல் இயக்கப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இன்று முதல் இயக்கம்
அதன்படி இன்று பிற்பகல் 3.10 மணியளவில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு திருப்பத்தூர், காக்கங்கரை, குன்னத்தூர், சாமல்பட்டி, தாசம்பட்டி, தொட்டம்பட்டி, மொரப்பூர், தொங்கனூர், புத்திரெட்டிபட்டி, பொம்மிடி, லோகூர், டேனிஷ்பேட்டை, தின்னப்பட்டி, கருப்பூர், சேலம், வீரபாண்டி ரோடு, மகுடஞ்சாவடி, மாவெள்ளிபாளையம், சங்கரிதுர்க், ஆனங்கூர், காவிரி ஆகிய 21 ரெயில் நிலையங்களில் நின்று செல்கிறது. இரவு 7.45 மணியளவில் ஈரோடு ரெயில் நிலையத்தை சென்றடையும்.
இந்த ரெயில் மீண்டும் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 6.25 மணியளவில் ஈரோடு ரெயில் நி லையத்தில் இருந்து புறப்பட்டு மேற்கண்ட ரெயில் நிலையங்களில் நின்று பயணிகளை இறக்கி, ஏற்றிக்கொண்டு மதியம் 12.10 மணியளவில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் வந்தடையும். இதனால் ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story