புனித சூசையப்பர் தேவாலயத்தில் பாஸ்கா விழா
மன்னார்குடி புனித சூசையப்பர் தேவாலயத்தில் பாஸ்கா விழா நடந்தது.
மன்னார்குடி:-
மன்னார்குடி கர்த்தநாதபுரத்தில் உள்ள புனித சூசையப்பர் தேவாலயத்தில் ஏசு கிறிஸ்து பிறப்பு திருவிழா எனப்படும் பாஸ்கா நாடக விழா நேற்று முன்தினம் இரவு நடந்தது. திருவிழாவையொட்டி கடந்த 21-ந் தேதி மாலை தேவாலயத்தில் அருளானந்து கொடியேற்றினார். தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் மாதா, சூசையப்பர் தேர்பவனி மற்றும் கூட்டு திருப்பலி, சிறப்பு மறையுரை நடைபெற்றது. முக்கிய நிகழ்வான ஏசு கிறிஸ்து பிறப்பு குறித்த பாஸ்கா என்கின்ற மேடை நாடகம் நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று அதிகாலை வரை நடந்தது. இந்த நாடகத்தில் தூயவளனார் கலைக்குழுவை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நடித்தனர். இதனை மன்னார்குடி, கர்த்தநாதபுரம், சவளக்காரன், பருத்திக்கோட்டை, வாழாச்சேரி, சமுதாயக்கரை, மஞ்சத்திடல், கானூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் பார்த்தனர். நாடகத்தை செலஸ்டியன் அடிகளார், கர்த்தநாதபுரம் பேராலய இறைமக்கள் குழு செயலாளர் சகாயம் மற்றும் இளைஞர்கள் ஒருங்கிணைத்து நடத்தினர்.
Related Tags :
Next Story