கர்நாடக பகுதிகளை மராட்டியத்துடன் இணைக்கும் போராட்டத்துக்கு முழு ஆதரவு- துணை முதல்-மந்திரி அஜித் பவார் பேச்சு
மராத்தி மொழி பேசும் மக்கள் அதிகம் வாழும் கர்நாடக பகுதிகளை மராட்டியத்துடன் இணைக்கும் போராட்டத்திற்கு மாநில அரசு முழு ஆதரவு அளிக்கும் என துணை முதல்-மந்திரி அஜித்பவார் கூறியுள்ளார்.
புனே,
மராத்தி மொழி பேசும் மக்கள் அதிகம் வாழும் கர்நாடக பகுதிகளை மராட்டியத்துடன் இணைக்கும் போராட்டத்திற்கு மாநில அரசு முழு ஆதரவு அளிக்கும் என துணை முதல்-மந்திரி அஜித்பவார் கூறியுள்ளார்.
நீண்டகால போராட்டம்
கர்நாடக மாநில எல்லை பகுதிகளான பெலகாவி, கர்வார் மற்றும் நிப்பானி ஆகிய பகுதிகளில் உள்ள பல கிராமங்களில் மராத்தி மொழி பேசும் மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். அவர்கள் தங்கள் பகுதிகளை கர்நாடகாவில் இருந்து பிரித்து மராட்டியத்துடன் இணைக்கவேண்டும் என வலியுறுத்தி நீண்டகாலமாக போராடி வருகின்றனர். இதுதொடர்பான வழக்கு தற்போது சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இந்தநிலையில் புனே நகரில் மராட்டிய தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் மாநில துணை முதல்-மந்திரி அஜித்பவார் கலந்துகொண்டு கூட்டத்தினர் மத்தியில் கூறியதாவது:-
உறுதி அளிக்கிறேன்...
மராட்டியம் உருவாகி 62 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், கர்நாடகாவில் உள்ள பீதர், பால்கி, பெலகாவி, கார்வார், நிப்பானி மற்றும் பிற இடங்களில் உள்ள மராத்தி மொழி பேசும் மக்கள் கொண்ட கிராமங்களை மராத்தியத்துடன் இணைக்க முடியாமல் போனதற்கு வருந்துகிறோம்.
மராட்டிய குடிமக்களும், அரசும் அங்குள்ள மக்கள் மராட்டியத்துடன் இணைய நடத்தும் போராட்டத்தின் ஒரு அங்கமாக தங்களை இணைத்துக்கொண்டுள்ளனர். இந்த கிராமங்கள் மராட்டியத்தின் ஒரு பகுதியாக மாறும் வரை அவர்கள் போராட்டத்தை நாங்கள் ஆதரிப்போம் என்று நான் உறுதி அளிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
சமூகவிரோத செயல்
இந்தநிலையில் நிகழ்ச்சி முடிந்ததும் துணை முதல்-மந்திரி அஜித் பவார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மராட்டியத்தில் உள்ள துலே மாவட்டத்தில் காரில் 86 வாள்கள் கைப்பற்றப்பட்டது குறித்தும், இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அவர், “சமூக விரோத செயல்களில் ஈடுபட திட்டமிட்டவர்கள் இந்த சம்பவத்திற்கு பின்னணியில் இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்” என்றார்.
Related Tags :
Next Story