சுகாதார வளாகம் புதிதாக கட்டப்படுமா?


சுகாதார வளாகம் புதிதாக கட்டப்படுமா?
x
தினத்தந்தி 1 May 2022 11:45 PM IST (Updated: 1 May 2022 11:45 PM IST)
t-max-icont-min-icon

மணல்மேடு அருகே சுகாதார வளாகம் புதிதாக கட்டப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மணல்மேடு:
மணல்மேடு அருகே சுகாதார வளாகம் புதிதாக கட்டப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சுகாதார வளாகம்
மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேட்டை அடுத்த பட்டவர்த்தி ஊராட்சிக்குட்பட்ட புத்தகரம் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
 இங்கு ஊரக கட்டிட பராமரிப்பு திட்டத்தின்கீழ் ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் கட்டப்பட்டது. நாளடைவில், இந்த  கட்டிடம் பழுதடைந்ததால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் அப்படியே பாழடைந்து கிடக்கிறது.
புதிதாக கட்டப்படுமா?
மேலும், இந்த சுகாதார வளாகத்தை சுற்றி முட்செடிகள், கொடிகள் அதிகளவு வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. இரவு நேரங்களில் சமூக விேராதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.
இந்த சுகாதார வளாகத்தை பராமரிப்பு செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தும் எவ்வித பயனும் இல்லை. 
எனவே, பழுதடைந்துள்ள சுகாதார வளாக கட்டிடத்தை  இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Next Story