தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி
பெரம்பலூர் 4 ரோடு ஈபி அலுவலகம் எதிரில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பாதியிலேயே நிறுத்தப்பட்டு 3 மாதமாக கிடப்பில் கிடந்தது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தி எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியை முழுமையாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட்டுள்ளனர். இதனால் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
முகமது அசாருதீன். பெரம்பலூர்.
கரூர் மாவட்டம், நச்சலூர், நெய்தலூர் பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் புதிதாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தார்சாலை போடப்பட்டது. தற்போது அந்த சாலைகின் இருபுறமும் ஒரு அடி ஆழத்திற்கு பள்ளம் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோர் பள்ளத்தில் இறங்கினால் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்படும் எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பள்ளத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தி எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளங்களை சரி செய்தனர். இதனால் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
பொதுமக்கள், நச்சலூர், கரூர்.
மின்கம்பங்களால் ஆபத்து
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள கொக்கராம்பள்ளம் ஏரி, கோரப்புள்ளிஏரி நடுப்பகுதியில் மின்கம்பங்கள் சாய்வாக மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த மின்கம்பங்கள் முறிந்து விழுந்தால் பெரும் விபத்து ஏற்பட அபாயம் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் அச்சத்துடனே சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
மதியழகன், தா.பழூர், அரியலூர்.
சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள்
புதுக்கோட்டை நகரில் பல்வேறு இடங்களில் பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் கூட்டம், கூட்டமாக மாடுகள் சுற்றித்திரிகிறது. மேலும் இந்த மாடுகளில் சாலையில் படுத்து தூங்குகிறது. சில நேரங்களில் ஒன்றோடு ஒன்று சண்டைப்போட்டு கொள்கிறது. இதனால் இரவு நேரங்களில் பணி முடிந்து வீட்டிற்கு செல்வோர் கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே நகராட்சி அதிகாரிகள் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். என அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெங்கடேஷ், புதுக்கோட்டை
Related Tags :
Next Story