விபத்துகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும்


விபத்துகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும்
x
தினத்தந்தி 2 May 2022 12:00 AM IST (Updated: 2 May 2022 12:00 AM IST)
t-max-icont-min-icon

கோவில் விழாக்களில் விபத்துகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என பேரிடர் மேலாண்மை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த் கூறினார்.

திட்டச்சேரி:
கோவில் விழாக்களில் விபத்துகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும்  என பேரிடர் மேலாண்மை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த் கூறினார்.
சப்பரத்தின் சக்கரத்தில் சிக்கி வாலிபர் சாவு
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரர் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி கடந்த 29-ந்தேதி நள்ளிரவு தெருவடைச்சான் சப்பரம் வீதி உலா நடைபெற்றது. 
சப்பரத்திற்கு முட்டுக்கட்டை போட முயன்றபோது திருச்செங்காட்டங்குடி மேலவீதியை சேர்ந்த தீபன்ராஜ் (வயது 30) என்பவர் சப்பரத்தின் சக்கரத்தில் சிக்கி பலியானார்.
ஒருநபர் குழு விசாரணை
தஞ்சை களிமேடு தேர் விபத்தில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்தது ெதாடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்க  வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த்தை ஒரு நபர் குழு தலைவராக நியமித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். 
 ஒரு நபர் குழு தலைவர் குமார் ெஜயந்த் நேற்று முன்தினம் தஞ்சை களிமேட்டில் சம்பவம் நடந்த இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். 2-வது நாளாக நேற்றும் அங்கு விசாரணை நடத்தினார்.
சப்பரத்தை பார்வையிட்டார்
இதை தொடர்ந்து ஒருநபர் குழு தலைவர் குமார் ஜெயந்த் நேற்று திருச்செங்காட்டங்குடிக்கு வந்து உத்தராபதீஸ்வரர் கோவிலின் தெருவடைத்தான் சப்பரத்தை பார்வையிட்டார். பின்னர் சப்பரம் சென்ற நான்கு மாட வீதிகளிலும் ஆய்வு செய்தார்.  
இதையடுத்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தஞ்சை களிமேடு தேர் விபத்து குறித்து விசாரணை நடத்த ஒருநபர் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளேன்.  இதுதொடர்பாக தஞ்சை களிமேட்டில்  2 நாட்களாக விசாரணை நடத்தி வந்தேன். 
அரசுக்கு அறிக்கை 
இதற்கிடையில் திருச்செங்காட்டங்குடியில் கோவில் திருவிழாவின் ேபாது சப்பரத்தின் சக்கரத்தில் சிக்கி தீபன்ராஜ் என்ற வாலிபர் உயிரிழந்துள்ளார்.. இதுதொடர்பாக விசாரணை நடத்த இங்கு வந்துள்ளேன். தஞ்சை களிமேடு சம்பவத்திற்கும், திருச்செங்காட்டங்குடி சம்பவத்திற்கும் வேறுபாடு உள்ளது. திருச்செங்காட்டங்குடியில் நடந்த சம்பவம் மீண்டும் நடக்கக்கூடாது என்பதற்காக விசாரணை நடத்த வந்துள்ளேன்.
 இதுதொடர்பாக விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை அளிக்க உள்ளேன். இனி கோவில் விழாக்களில் விபத்துகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story