தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
கொரோனா கட்டளை மையம் செயல்பாட்டிற்கு வருமா?
திருச்சி மாவட்டத்தில் கடந்த வாரத்தில் மட்டும் 5 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கொரோனா கட்டளை மையம் செயல்பாடின்றி பூட்டப்பட்டுள்ளது. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் பூட்டப்பட்ட கொரோனா கட்டளை மையத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், திருச்சி.
புதிதாக தடுப்புச்சுவர் கட்ட கோரிக்கை
திருச்சி மாவட்டம், துறையூர் வட்டத்தில் பச்சமலை உள்ளது. இந்தநிலையில் துறையூரில் இருந்து கீரம்பூர், செங்காட்டுப்பட்டி, மூலக்காடு, வனத்துறை செக்போஸ்ட் வழியாக மலைக்கு மேலே ஏறும் தார்சாலையில் கொண்டை ஊசி வளைவில் தடுப்பு சுவர் பழுதடைந்து உள்ளது. இதன் மீது ஏறி நின்று சுற்றுலாப் பயணிகள் சுற்றி பார்க்கின்றனர். எனவே பழுதடைந்துள்ள சுற்று சுவரை புதிதாக கட்டி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், துறையூர், திருச்சி.
குடிநீர் வசதி வேண்டும்
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே பூலாங்குடி காலனியில் உள்ள சக்திநகர், வடக்கு காலனி, வடக்கு 1-வது தெரு பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் இங்கு போதுமான குடிநீர் வசதி இல்லாதாதல் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே கூடுதலாக ஆழ்குழாய் கிணறு அமைத்து அதன் மூலம் கூடுதலாக குடிநீர் வினியோகம் செய்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், திருவெறும்பூர், திருச்சி.
குண்டும், குழியுமான சாலை
திருச்சி மாவட்டம், நம்பர் ஒன் டோல்கேட்டில் இருந்து லால்குடி செல்லும் சாலையில் தாளக்குடியில் இருந்து வாளாடி வரை சாலை மிகவும் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைகின்றனர். மேலும் அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், திருச்சி.
மாட்டு சாணத்தால் துர்நாற்றம்
திருச்சி மாவட்டம், மேலகல்கண்டார் கோட்டை மூகாம்பிகை நகர் விரிவாக்கம் பகுதியில் மலைப்போல் மாட்டு சாணம் குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் மழை நேரங்களில் அதிக துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள், முதியவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குவிந்து கிடக்கும் மாட்டுச்சாணத்தை அந்த பகுதியில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், மேலகல்கண்டார் கோட்டை, திருச்சி.
--------
Related Tags :
Next Story