மாமண்டூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
மாமண்டூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
காவேரிப்பாக்கம்
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த மாமண்டூர் ஊராட்சியில் மே தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் சுலோச்சனா பிரகாஷ் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் சக்தி, வருவாய் ஆய்வாளர் சுபலபிரியா, துணைத்தலைவர் நிஷாந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் தினேஷ் வரவேற்றார்.
கிராம சபை கூட்டத்தில் ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். தூய்மை பாரத இயக்கத்தில் ஊராட்சியை தூய்மையாக வைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் அனைவருக்கும் வேலை கிடைக்க ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனையடுத்து பொதுமக்களிடம் இருந்து வீட்டு மனை பட்டா, வீடு, சாலை வசதி உள்ளிட்ட கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட வீட்டு வசதி உதவி திட்ட அலுவலர் கவுரி, வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பரசன், உதவி வேளாண்மை அலுவலர் ஸ்வேதா, வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் ஜெயகாந்தன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story