அகழாய்வில் கிடைத்த பழங்கால பொருட்கள்
சிவகாசி அருகே அகழாய்வில் பழங்கால பொருட்கள் கிடைத்தது.
தாயில்பட்டி,
சிவகாசி அருகே உள்ள விஜய கரிசல்குளத்தில் நடைபெற்று வரும் அகழாய்வு பணியில் 5-வது அகழாய்வு குழிகளில் ஏராளமான பொருட்கள் தொடர்ந்து கிடைத்துள்ளதாக அகழாய்வு இயக்குனர் பொன்பாஸ்கர், துணை இயக்குனர் பரத்குமார் கூறினர். அழகிய வேலைப்பாடுடன் அமைந்துள்ள அகல்விளக்கு, மற்றும் ஆடுபுலி ஆட்டத்திற்கு பயன்படுத்தக்கூடிய ஆட்டக்காய்கள், ஏராளமான சங்கு வளையல்கள், சுடுமண்ணால் செய்யப்பட்ட பொம்மைகள் ஆகியவை கிடைத்துள்ளன. மேலும் உடைந்த நிலையில் செங்கற்கள் கிடைத்துள்ளன. இதன் மூலம் வீட்டின் ஒரு பகுதி சுவர் தெரிய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story