மாணவர்களுக்கு தனித்திறன் போட்டி


மாணவர்களுக்கு தனித்திறன் போட்டி
x
தினத்தந்தி 2 May 2022 12:12 AM IST (Updated: 2 May 2022 12:12 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை அருகே ஆனதாண்டவபுரம் மாணவர்களுக்கு தனித்திறன் போட்டி நடைபெற்றது

மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே ஆனதாண்டவபுரம் ராதாநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு தனித்திறன் போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் அறிவழகன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் ராணி ராஜகோபால் முன்னிலை வகித்தார்.. மேலும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி மரம் நடும் விழாவும் நடந்தது.  இல்லம் தேடி கல்வி திட்ட மயிலாடுதுறை வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் மனோகர், வீரபாண்டியன் ஆகியோர்  பேசினர். இதில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் முருகையன், ஆசிரியர் பயிற்றுனர் அறிவரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தன்னார்வலர்கள் செய்திருந்தனர். முடிவில் ஆசிரியை சுமதி நன்றி கூறினார்.

Next Story