சாலையில் சுற்றித்திரிந்த காட்டு யானை


சாலையில் சுற்றித்திரிந்த காட்டு யானை
x
தினத்தந்தி 2 May 2022 12:25 AM IST (Updated: 2 May 2022 12:25 AM IST)
t-max-icont-min-icon

அஞ்செட்டி அருகே சாலையில் சுற்றித்திரிந்த காட்டு யானை பஸ்சை மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அஞ்செட்டி வனச்சரகத்தில் 70-க்கும் மேற்பட்ட யானைகள் சுற்றித்திரிகின்றன. இதில் பனை காப்புக்காட்டில் மக்னா என்ற காட்டு யானை முகாமிட்டுள்ளது. நேற்று காலை தேன்கனிக்கோட்டையில் இருந்து அஞ்செட்டி செல்லும் சாலையில் உள்ள குந்துக்கோட்டை அருகே திடீரென சாலைக்கு வந்த மக்னா யானை அந்த வழியாக வந்த அரசு பஸ்சை  வழிமறித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் சமர்த்தியத்துடன் பஸ்சை வேகமாக எடுத்து சென்று விட்டார். பின்னர் சாலையில் சுற்றித்திரிந்த யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று பதுக்கி கொண்டது. சாலையில் சுற்றித்திரிந்த காட்டுயானை பஸ்சை வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story