பூனப்பள்ளி ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் தலைவருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
பூனப்பள்ளி ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் தலைவருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓசூர்:
ஓசூர் ஒன்றியம் பூனப்பள்ளி ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்தது. கூட்டத்திற்கு, ஊராட்சி தலைவர் சாவித்ரியம்மா பைரப்பா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார். இதில், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜீவா கலந்து கொண்டார். இதில், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் புத்தன் சின்னசாமி, கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேஷ், பூனப்பள்ளி ஊராட்சி தி.மு.க. கிளை செயலாளர் மஞ்சுநாதப்பா மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பூனப்பள்ளியில் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும். விளையாட்டு உபகரணங்களை, ஊராட்சி சார்பில் ஏற்பாடு செய்துதர வேண்டும் என்று வலியுறுத்தி இளைஞர்கள், பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர், செயலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஊராட்சி தலைவர் பேசுகையில் அதிகாரிகளிட் பேசி, விளையாட்டு மைதானம் அமைக்கவும், விளையாட்டு உபகரணங்கள் வாங்கி கொடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். தொடர்ந்து கூட்டத்தில், 2022-2023- ம் ஆண்டுக்கான ஊராட்சி திட்ட வளர்ச்சி பணிகள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம், மழைநீர் சேகரிப்பு, பிளாஸ்டிக் கவர் தடை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. முடிவில், ஊராட்சி செயலர் சுபாஷினி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story