நல்லம்பள்ளி அருகே விஷம் குடித்து பிளஸ்-2 மாணவி தற்கொலை


நல்லம்பள்ளி அருகே விஷம் குடித்து பிளஸ்-2 மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 2 May 2022 12:29 AM IST (Updated: 2 May 2022 12:29 AM IST)
t-max-icont-min-icon

நல்லம்பள்ளி அருகே விஷம் குடித்து பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே கொமத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகள் லட்சுமிபிரியா (வயது17). இவர் லளிகம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த 17-ந் தேதி மாணவி லட்சுமிபிரியா விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை பெற்றோர் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மாணவி வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாணவி லட்சுமிபிரியா நேற்று முன்தினம்  பரிதாபமாக இறந்தார். மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story