அரசு பஸ் டிரைவரை தாக்கிய வாலிபர் கைது
அரசு பஸ் டிரைவரை தாக்கிய வாலிபர் கைது
மோகனூர்:
நாமக்கல் பஸ் நிலையத்தில் இருந்து வளையப்பட்டி வழியாக காட்டுப்புத்தூர் வரை அரசு பஸ் சென்று வருகிறது. இந்த பஸ் வழக்கம் போல் நேற்று காலை காட்டுப்புத்தூரில் இருந்து நாமக்கல் சென்று கொண்டிருந்தது. பஸ்சை வளையப்பட்டியை சேர்ந்த ரகுபதி (வயது 49) என்பவர் ஓட்டி வந்தார். அப்போது வளையப்பட்டி அண்ணாநகரை சேர்ந்த பெருமாள்சாமி மகன் பெயிண்டர் மோகன்ராஜ் (22) என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் சாலையின் நடுவே வந்து கொண்டிருந்ததாக தெரிகிறது. இதை பார்த்த டிரைவர் மோட்டார்சைக்கிளில் மோதாமல் இருப்பதற்காக சுதாரித்து பஸ்சை நிறுத்தினார்.
பின்னர் சாலையின் நடுவில் விதியை மீறி ஏன் வருகிறீர்கள் என டிரைவர் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மோகன்ராஜ் தகாத வார்த்தைகளால் திட்டி அடித்து உதைத்து கொலை மிரட்டல் விடுத்தார். இதில் காயமடைந்த டிரைவர் ரகுபதி நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுசிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் மோகனூர் போலீசில் அளித்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் தங்கவேல், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவரை தாக்கிய மோகன்ராஜை கைது செய்தனர்.
Related Tags :
Next Story