பரமத்தியில் எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை
பரமத்தியில் எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை
பரமத்திவேலூர்:
பரமத்தி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் பிரான்சிஸ். இவருடைய மகன் பிரதீபன் (வயது 24) எலக்ட்ரீசியன். இவர் குடும்ப பிரச்சினை காரணமாக மனமுடைந்த நிலையில் இருந்து வந்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை வீட்டில் தூங்கி கொண்டிருந்தவர்கள் எழுந்த போது பிரதீபன் வீட்டில் உள்ள விட்டத்தில் வயர் கம்பியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து அவரது குடும்பத்தினர் பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார் பிரதீபனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story