மே தின பேரணி
விருதுநகரில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் மே தின பேரணி நடைபெற்றது.
விருதுநகர்,
மே தினத்தையொட்டி விருதுநகரில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் மே தின பேரணி நடைபெற்றது. இந்நகர் மதுரை ரோட்டில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பு இருந்து புறப்பட்ட பேரணி தேசபந்து திடலில் நிறைவடைந்தது. தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் தேனி வசந்தன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினர் பாலமுருகன் ஆகியோர் தலைமையில் நடந்த பேரணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் காதர்முகைதீன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் முத்துகுமார், ஒன்றிய செயலாளர் சக்கணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் முருகன் உள்ளிட்ட நிர்வாகிகளும், தொழிற்சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். மேலும் தேசிய தொழிலாளர் ஊழியர் சங்கத்தின் சார்பில் விருதுநகர் பி.எஸ்.என்.எல். துணை பொது மேலாளர் அலுவலகம் முன்பு மே தின கொடியேற்று விழா நடைபெற்றது. மாநில உதவிச் செயலாளர் ரமேஷ் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் காதர் முகைதீன், ரவி, முத்துக்குமார், சக்கணன், பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் நல சங்கத்தின் மாவட்ட தலைவர் சண்முகம் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். முடிவில் மாவட்ட பொருளாளர் சீனிவாசன் நன்றி கூறினார். சாத்தூரில் சி.ஐ.டி.யு. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பேரணி நடைபெற்றது. பேரணிக்கு நகர கன்வீனர் சீனிவாசன், ஒன்றிய கன்வீனர் மனோஜ்குமார் தலைமை தாங்கினர். பாண்டியன், ரமேஷ்பாபு மற்றும் பாலம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட செயலாளர் தேவா, சாலை போக்குவரத்து மாவட்ட தலைவர் விஜயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story