கிராமங்களை பசுமையாக மாற்ற பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்
கிராமங்களை பசுமையாக மாற்ற பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் அருண் தம்புராஜ் கூறினார்.
திட்டச்சேரி:
கிராமங்களை பசுமையாக மாற்ற பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் அருண் தம்புராஜ் கூறினார்.
கிராம சபை கூட்டம்
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சியில் மே தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். மீன்வளர்ச்சிக் கழக தலைவர் கவுதமன், முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலெக்டர் பேசும் போது கூறியதாவது:-
கிராம சபை கூட்டத்தில் மக்களுக்கு அனைத்து விஷயங்களையும் தெளிவாக தெரியப்படுத்த வேண்டும். இக்கூட்டத்தின் முக்கிய நோக்கம் நமக்கு தேவையான திட்டங்கள் என்ன என்பதை முதலில் பொதுமக்கள் அறிந்துக்கொள்ள வேண்டும்.
நீர்வளத்தை பாதுகாக்க வேண்டும்
கிராம மக்களின் தேவைகளை அறிந்து அதனை பூர்த்தி செய்யும் பொறுப்பு ஒவ்வொரு துறை அலுவலர்களுக்கும் உள்ளது. நமக்கு மட்டுமின்றி வருங்கால சந்ததியினருக்கும் பயன்படும் வகையில் நீர்வளத்தை பாதுகாத்திட வேண்டும்.
கிராமத்தை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் கழிப்பறையை பயன்படுத்த வேண்டும். கிராமங்களை பசுமையாக மாற்ற பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சவுந்தரராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலமுருகன், பாத்திமா ஆரோக்கியமேரி, திருமருகல் வட்டார ஆத்மா குழு தலைவர் செல்வ செங்குட்டுவன், பனங்குடி ஊராட்சி மன்ற தலைவர் ஜமுனா செந்தில்குமார், அரசு அலுவலர்கள், ஊராட்சி பேரிடர் மேலாண்மை குழு உறுப்பினர்கள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.
Related Tags :
Next Story