பா.ஜனதா நிர்வாகி தாக்கப்பட்டதால் பரபரப்பு


பா.ஜனதா நிர்வாகி தாக்கப்பட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 2 May 2022 1:34 AM IST (Updated: 2 May 2022 1:34 AM IST)
t-max-icont-min-icon

கீரனூர் அருகே பா.ஜனதா நிர்வாகி தாக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கீரனூர், 
தொழிலாளர் தினத்தையொட்டி கீரனூர் அடுத்துள்ள தெம்மாவூர் கிராமத்தில் நேற்று கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் கருப்பையா தலைமை தாங்கினார். கூட்டத்தில் பா.ஜனதா தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த விசுவநாதன் (வயது 35) தங்கள் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் வசதியில்லை என கூறியுள்ளார். இதற்கு பதிலளித்த தலைவர் நிதி ஒதுக்கீடு செய்யும் போது செய்து தருவதாக கூறியுள்ளார். பின்னர் கூட்டம் நிறைவடைந்ததும் விசுவநாதன் சென்றபோது அவரை சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது. 
இதில், பலத்த காயம் அடைந்த அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த  சம்பவம் குறித்து உடையாளிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் பா.ஜனதா நிர்வாகி தாக்கப்பட்டதை அறிந்த மாவட்ட தலைவர் செல்வம் அழகப்பன் காயமடைந்த விஸ்வநாதனை நேரில் சென்று நலம் விசாரித்தார். மேலும் இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story