மூதாட்டி கொலை வழக்கு: மேலும் ஒருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


மூதாட்டி கொலை வழக்கு: மேலும் ஒருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 2 May 2022 1:42 AM IST (Updated: 2 May 2022 1:42 AM IST)
t-max-icont-min-icon

மூதாட்டி கொலை வழக்கில் கைதான மேலும் ஒருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

புதுக்கோட்டை, 
புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் மூதாட்டி கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த சிவா என்கிற ஜீவானந்தம் (வயது 46) டவுன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்தநிலையில் ஜீவானந்தம் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் கவிதா ராமுவுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் ஜீவானந்தம் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட முதல் குற்றவாளியான வீரராசு ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story