பெரம்பலூர் மாவட்டத்தில் மே தின விழா


பெரம்பலூர் மாவட்டத்தில் மே தின விழா
x
தினத்தந்தி 2 May 2022 1:42 AM IST (Updated: 2 May 2022 1:42 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டத்தில் மே தின விழா நடைபெற்றது.

பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் தொழிலாளர் தினமான மே தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் தி.மு.க.வின் தொழிலாளர் முன்னேற்ற சங்கம், அ.தி.மு.க.வின் அண்ணா தொழிற்சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுவின் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சம் மற்றும் அனைத்து அரசியல் கட்சியின் தொழிற்சங்கள் சார்பில் கொடியேற்றப்பட்டது. மேலும் அ.தி.மு.க.வின் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் நேற்று இரவு பெரம்பலூர் மேற்கு வானொளி திடலில் மே தின பொதுக்கூட்டமும் நடந்தது. சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. ஆகிய தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் பெரம்பலூர் ரோவர் வளைவு அருகே நேற்று மாலையில் ஒன்று கூடினர். பின்னர் அவர்கள் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் மாவட்ட தலைவர் அகஸ்டின், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொறுப்பாளர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டு புதிய பஸ் நிலையத்துக்கு வந்தனர். ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் கார்ப்ரேட் கம்பெனிகளுக்கும், பெருமுதலாளிகளுக்கும் ஆதரவான நவீன தாராளமய பொருளாதார கொள்கைகளை கைவிட வேண்டும். வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்த வேண்டும். காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும். முறைசாரா தொழிலாளர்களுக்கு மாதம் குறைந்த பட்சம் ரூ.6 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். குறைந்த பட்சம் மாத ஊதியம் ரூ.21 ஆயிரம் வழங்கிட வேண்டும். 2019 மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெற வேண்டும். பெட்ரோல்-டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசே நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர். அதனை தொடர்ந்து புதிய பஸ் நிலையத்தில் இரவு மே தின பொதுக்கூட்டம் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக சி.ஐ.டி.யு.வின் மாநில துணைத் தலைவர் சிங்காரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ஞானசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு தொழிலாளர்களின் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணி புதிய பஸ் நிலைய நடைபாதை வியாபாரிகள் சங்கத்தின் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது.

Next Story