தொழிலாளர் தினத்தையொட்டி மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்


தொழிலாளர் தினத்தையொட்டி மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்
x
தினத்தந்தி 2 May 2022 1:54 AM IST (Updated: 2 May 2022 1:54 AM IST)
t-max-icont-min-icon

தொழிலாளர் தினத்தையொட்டி மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது.

காரைக்குடி, 
தொழிலாளர் தினத்தையொட்டி மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது. 
கிராமசபை கூட்டம் 
தொழிலாளர் தினத்தையொட்டி சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் அமராவதிபுதூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சிமன்ற தலைவர் சுப்பையா தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி முன்னிலை வகித்தார். மாங்குடி எம்.எல்.ஏ. வாழ்த்துரை வழங்கினார். வேளாண் துறை, சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் தமிழக அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துரைத்தனர். கூட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் கலந்துகொண்டு பேசியதாவது, 
இந்த ஊராட்சிப்பகுதியின் நெடுஞ்சாலையோடு இணைப்பு சாலைகள் அமைக்கப்படும். இப்பகுதியில் மின்மயானம் அமைக்கப்படும். ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் வேலைகள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அமராவதிப்புதூரில் சமத்துவபுரத்தில் உள்ள வீடுகளை புதுப்பித்து, சாலைகள், ரேஷன் கடைகள் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 
குடிநீர் தேவை 
இப்பகுதியின் குடிநீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய மேலும் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்படும். ஊராட்சிகளின் நிர்வாக வசதிக்காக தமிழ்நாடு முழுவதும் 600 ஊராட்சி செயலக கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன. இதற்கான கணக்கீட்டு ஆய்வின் போது அமராவதி ஊராட்சியிலும் அதனை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும். 
இவ்வாறு கூறினார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தென்னவன், முன்னாள் தி.மு.க. மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பள்ளத்தூர் ரவி, மாவட்ட வருவாய் அலுவலர் மணிமாறன், கோட்டாட்சியர் பிரபாகரன், தாசில்தார் மாணிக்கவாசகம், சாக்கோட்டை ஒன்றிய ஆணையாளர் கேசவன், காரைக்குடி நகர தி.மு.க. செயலாளர் குணசேகரன், சாக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் சுப. சின்னத்துரை, மேற்கு ஒன்றிய செயலாளர் கே.ஆர். ஆனந்த், கல்லல் கிழக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட கவுன்சிலர்கள் செந்தில்குமார், ராதா பாலசுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர். 
இளையான்குடி 
இளையான்குடி ஒன்றியம் முத்தூர் கிராம ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் பாண்டிச்செல்வி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரேணுகா மற்றும் மாவட்ட குழு உறுப்பினர் சாந்தா ராணி ஆகியோர் கலந்துகொண்டனர். முன்னதாக ஊராட்சி செயலர் பாக்கியராஜ் ஊராட்சி மன்ற வரவு, செலவு கணக்குகளை சமர்ப்பித்தார். 
இளையான்குடி வட்ட சட்ட பணிகள் குழுவின் சார்பாக இளையான்குடி வட்ட சட்ட பணிகள் குழு தலைவரும், நீதிபதியுமான எம்.சுனில் ராஜா உத்தரவுப்படி மேலாயூர் கிராம ஊராட்சியில் கிராம சபை கூட்டம் மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி பார்த்தசாரதி தலைமை தாங்கினார். வக்கீல் சுகன்யா பேசினார். ஊராட்சி செயலாளர் கோவிந்தன், அரசு வக்கீல் பார்த்தசாரதி, மகளிர் திட்டம் கவிதா, வட்ட சட்ட பணிகள் குழு இளவரசன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

Next Story