சவுராஷ்டிரா அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


சவுராஷ்டிரா அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x

மதுரையில் சவுராஷ்டிரா அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மதுரை

மதுரையில் சவுராஷ்டிரா மொழியில் பைபிளை அச்சிட்டு கிறிஸ்தவர்கள் சிலர் வீடு வீடாகச்சென்று வினியோகிப்பதாகவும், கிறிஸ்தவ மதத்துக்கு மாறும்படி பிரசாரத்தில் ஈடுபடுவதாகவும் புகார் எழுந்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், சவுராஷ்டிரா மொழியில் பைபிள் அச்சிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரி மாவட்ட கலெக்டர் மற்றும் காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்தநிலையில் சவுராஷ்டிரா சமூகத்தினரை மதமாற கட்டாயப்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு சவுராஷ்டிரா சபை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மதுரை முனிச்சாலை பகுதியில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார்.. இதில் பல்வேறு சவுராஷ்டிரா அமைப்புகளின் தலைவர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் மத மாற்றத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.


Next Story