ஆற்றில் மூழ்கி தொழிலாளி சாவு


ஆற்றில் மூழ்கி தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 2 May 2022 2:26 AM IST (Updated: 2 May 2022 2:26 AM IST)
t-max-icont-min-icon

ஆற்றில் மூழ்கி தொழிலாளி இறந்தார்.

அம்பை:

அம்பை சுப்பிரமணியபுரம் பொத்தை பகுதியைச் சேர்ந்த பாலையா மகன் நாகராஜன் (வயது 44). தச்சுத் தொழிலாளியான இவருக்கு செல்வி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்தநிலையில் நாகராஜன் நேற்று காலை நண்பர்களுடன் அம்பை சின்ன சங்கரன்கோவில் பகுதி தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்றார். அப்போது திடீரென அவர் நீரில் மூழ்கினார்.

இதுகுறித்து அம்பை போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) நாகநாதன் தலைமையில் வீரர்கள் சென்று நாகராஜன் உடலை மீட்டனர். அவரது உடலை போலீசார் கைப்பற்றி பரிசோதனைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story