வீட்டின் பூட்டை உடைத்து 69 பவுன் நகை கொள்ளை

மதுரை அருகே தனியார் நிறுவன அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 69 பவுன் நகை கொள்ளை போனது தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.
மதுரை,
மதுரை அருகே தனியார் நிறுவன அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 69 பவுன் நகை கொள்ளை போனது தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.
தனியார் நிறுவன அதிபர்
மதுரை கருப்பாயூரணி வீரபாஞ்சான் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 37). இவர் கிருஷ்ணாபுரம் காலனி பகுதியில் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார்.
கடந்த 29-ந்தேதி, இவருடைய மனைவி கோவையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். இதுபோல், முருகன் அன்றைய தினம் வீட்டை பூட்டி விட்டு, கிருஷ்ணாபுரம்காலனி பகுதியில் உள்ள தனது நிறுவனத்திற்கு வந்து விட்டார். பின்னர் இரவு வீட்டிற்கு திரும்பி சென்றபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த துணிகள் அனைத்தும் அறையில் சிதறிக்கிடந்தது. மேலும், பீரோவின் உள்ளே பார்த்தபோது, 69 பவுன் நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது.
புகார்
இதுகுறித்து முருகன் கருப்பாயூரணி போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், கொள்ளையர்கள் விட்டு சென்ற தடயங்களையும் சேகரித்தனர்.
Related Tags :
Next Story