குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது


குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 2 May 2022 3:20 AM IST (Updated: 2 May 2022 3:20 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

மதுரை,

மதுரை பீ.பி.குளம் பர்மாநகரை சேர்ந்தவர் பழனிவேல். இவருடைய மகன் பூபதி ராகவேந்திரா (வயது 19). இவர் மீது நகரின் பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யும் படி, மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். அதன்படி, பூபதிராகவேந்திரா கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story