கட்டுமான தொழிலாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் வேண்டி விண்ணப்பிக்கலாம்; உதவி ஆணையாளர் தகவல்


கட்டுமான தொழிலாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் வேண்டி விண்ணப்பிக்கலாம்; உதவி ஆணையாளர் தகவல்
x
தினத்தந்தி 2 May 2022 3:36 AM IST (Updated: 2 May 2022 3:36 AM IST)
t-max-icont-min-icon

கட்டுமான தொழிலாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் வேண்டி விண்ணப்பிக்கலாம் என்று தொழிலாளர் உதவி ஆணையாளர் தெரிவித்து உள்ளார்.

ஈரோடு
கட்டுமான தொழிலாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் வேண்டி விண்ணப்பிக்கலாம் என்று தொழிலாளர் உதவி ஆணையாளர் தெரிவித்து உள்ளார்.
பாதுகாப்பு உபகரணங்கள்
இதுகுறித்து தொழிலாளர் உதவி ஆணையாளர் (சமூக பாதுகாப்பு திட்டம்) காயத்திரி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு பெற்று, புதுப்பித்தல் செய்த கொத்தனார், சித்தாள் (ஆண், பெண்), பிளம்பர், மிக்ஸர், சாலை பணியாளர், எலக்ட்ரீசியன், கம்பி வளைப்பவர், பெயிண்டர், தச்சர், வெல்டர் உள்பட 11 வகையான கட்டுமான தொழிலாளர்கள் உள்ளனர்.
இவர்களுக்கு தலைக்கவசம், மூக்கு முகமூடி, பாதுகாப்பு முழு உடல் கவசம், வெல்டிங் முககவசம், பிரதிபலிக்கும் ஜாக்கெட், பாதுகாப்பு காலணிகள், ரப்பர் கையுறை, மின்சார பாதுகாப்பு கையுறை, ரப்பர் பூட், பாதுகாப்பு கண்ணாடிகள், பாதுகாப்பு பெல்ட், காட்டன் கையுறை, பாதுகாப்பு உபகரண பை போன்ற 13 வகையான சுய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது.
நலவாரிய அடையாள அட்டை
எனவே ஏற்கனவே பாதுகாப்பு உபகரணங்கள் பெறாதவர்கள் வருகிற 5-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் இதற்கான விண்ணப்பங்களை, ஈரோடு சென்னிமலை ரோடு அரசு ஐ.டி.ஐ. பின்புறம் உள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக வளாகத்தில் தரை தளத்தில் செயல்படும் தொழிலாளர் உதவி ஆணையாளர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் அரசு வேலை நாட்களில் சமர்ப்பிக்கலாம்.
விண்ணப்பத்துடன் அனைத்து பக்கங்களுடன் நலவாரிய அடையாள அட்டை, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆகியவற்றின் நகல்களை இணைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0424 2275592 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story