அயோத்தியாப்பட்டணம் அருகே கிராமசபை கூட்டத்தில் அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகை
அயோத்தியாப்பட்டணம் அருகே கிராமசபை கூட்டத்தில் அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
அயோத்தியாப்பட்டணம்:
அயோத்தியாப்பட்டணம் அடுத்த சின்னகவுண்டாபுரம் ஊராட்சியில், கிராமசபை கூட்டம், ஊராட்சி மன்ற தலைவர் கோபால் தலைமையில் நேற்று நடந்தது. இதில் வருவாய் ஆய்வாளர் சந்திர கேசவன், கிராம நிர்வாக அதிகாரி விஜயராஜ் மற்றும் சுகாதாரத்துறை, வேளாண்மை துறை உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஊராட்சி வளர்ச்சி, மேம்படுத்துதல், அடிப்படை தேவைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இதன்பின்னர் அந்த பகுதியை சேர்ந்த 45-க்கும் மேற்பட்டோர் அனுபவச்சான்று, சாதிச்சான்று, வருமானச் சான்று உள்ளிட்ட பல்வேறு தேவைக்காக கிராம நிர்வாக அதிகாரி, வருவாய் ஆய்வாளர் ஆகியோரிடம் ்விண்ணப்பித்து, சான்றுகள் வழங்கவில்லை என குற்றம்சாட்டி, இருவரையும் முற்றுகையிட்டனர். தொடர்ந்து பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கிராமசபை கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பொதுமக்களை சமரசம் செய்தனர். தொடர்ந்து கிராமசபை கூட்டத்தில் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு, தனிபட்டா வழங்க உத்தரவிடக்கோரி தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என்று கூட்டத்தில் பங்கேற்றவர்கள் மனு கொடுத்தனர்.
Related Tags :
Next Story