நம்பியூர் அருகே பரபரப்பு: ரத்து செய்யப்பட்ட கிராம சபை கூட்டம் திடீரென நடந்ததால் அதிகாரியை பொதுமக்கள் முற்றுகை
நம்பியூர் அருகே ரத்து செய்யப்பட்ட கிராம சபை கூட்டம் திடீரென நடந்ததால் அதிகாரியை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நம்பியூர்
நம்பியூர் அருகே ரத்து செய்யப்பட்ட கிராம சபை கூட்டம் திடீரென நடந்ததால் அதிகாரியை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ரத்து
மே தினத்தையொட்டி நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 15 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதன்படி வேமாண்டம்பாளையம் ஊராட்சியின் கிராம சபை கூட்டம் நேற்று காலை 10 மணிக்கு வேமாண்டம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கியது. அப்போது போதிய அளவில் பொதுமக்கள் இல்லாததால் கிராமசபை கூட்டம் வேறு ஒரு நாளுக்கு ஒத்தி வைக்கப்படுவதாக கூறப்பட்டது. இதை ஊராட்சி செயலாளர் கருப்புசாமி அறிவித்தார்.
முற்றுகை
இந்தநிலையில் மாலை 4 மணி அளவில் திடீரென கிராம சபை கூட்டம் நடைபெறுவதாக அறிவிப்பு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து வேமண்டம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கூட்டம் நடந்தது. நம்பியூர் வட்டார வளர்ச்சி அதிகாரி சக்திவேல் கூட்டத்தில் கலந்து கொண்டார். இதையொட்டி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அப்போது அங்கு வந்த பொதுமக்கள், வட்டார வளர்ச்சி அலுவலரை முற்றுகையிட்டு காலையில் ரத்து செய்யப்பட்ட கூட்டம் திடீரென எந்த அறிவிப்பும் இன்றி ஏன் மாலையில் நடத்தப்பட்டது என கேட்டனர். அதற்கு வட்டார வளர்ச்சி அதிகாரி சக்திவேல் கூறுகையில், ‘மாவட்ட கலெக்டர் அனுமதி பெற்ற பின்பு, போதிய அளவில் பொதுமக்கள் வருகை தந்ததால் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது,’ என்றார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story