அதிகாரிகள் வராததால் பொதுமக்கள் எதிர்ப்பு: தாளவாடி ஊராட்சி கிராம சபை கூட்டம் ஒத்திவைப்பு
அதிகாரிகள் வராததால் பொதுமக்கள் எதிர்ப்பு தொிவித்தனா். இதனால் தாளவாடி ஊராட்சி கிராம சபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
தாளவாடி
தொழிலாளர் தினத்தையொட்டி தாளவாடி ஊராட்சியின் கிராம சபை கூட்டம் அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவர் திராஷாயிணி தலைமை தாங்கினார். இதில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அரசு துறை அதிகாரிகள் பலர் வரவில்லை என பொதுமக்கள் அங்கிருந்த சில அதிகாரிகளிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனே அங்கு வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்கள் கூறுகையில், ‘பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் கிராம சபைக்கூட்டத்துக்கு வரவில்லை. இதனால் தங்களது கோரிக்கைகளை தீர்மானமாக நிறைவேற்ற முடியவில்லை. எனவே இந்த கிராம சபை கூட்டத்தை அனைத்து துறை அதிகாரிகளுடன் வேறொரு நாளில் நடத்த வேண்டும்,’ என்றனர். இதைத்தொடர்ந்து கிராம சபை கூட்டம் தேதி குறிப்பிடாமல் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன் கூறினார். இந்த சம்பவத்தால தாளவாடி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story