ஈரோட்டில் சூறாவளிக்காற்றுடன் மழை; மின்தடையால் பொதுமக்கள் அவதி
ஈரோட்டில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. மின்தடையால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
ஈரோடு
ஈரோட்டில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. மின்தடையால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
மழை
ஈரோட்டில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்தது. 104 டிகிரி வரை வெயில் வாட்டி வதைப்பதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகிறார்கள். தினமும் இரவில் வெப்பசலனம் காணப்படுவதால், தூங்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
இந்தநிலையில் நேற்று பகலில் ஈரோட்டில் வெயில் சுட்டெரித்தது. மாலையில் திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அப்போது சூறாவளி காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரம் மட்டும் பலத்த மழையாக பெய்தது. அதன்பிறகு மழை சாரல் பெய்து கொண்டே இருந்தது.
மின்தடை
சூறாவளி காற்று வீசியதால் பெரியார்நகரில் மின் கம்பத்தின் மீது மரத்தின் கிளை உடைந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இதேபோல் ஈரோடு வீரப்பன்சத்திரம், பஸ் நிலையம், மூலப்பாளையம், நாடார்மேடு உள்ளிட்ட இடங்களில் சுமார் 1 மணிநேரம் மின்தடை செய்யப்பட்டால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சீதோசன நிலை காணப்பட்டது. இதனால் வெப்பசலனத்தினால் சிரமப்பட்ட மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.
Related Tags :
Next Story