வீட்டின் கதவை திறந்து நகை-பணம் திருட்டு
வீட்டின் கதவை திறந்து நகை-பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
உப்பிலியபுரம்:
உப்பிலியபுரத்தை அடுத்துள்ள சிக்கத்தம்பூர் காலனி தெருவை சேர்ந்த புஷ்பராணி(52), நேற்று முன்தினம் இரவு தனது வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள உறவினர் கற்பகத்தின் வீட்டில் தூங்கச்சென்றார். நேற்று அதிகாலை அவர் வீட்டிற்கு வந்த வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இது குறித்து துறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், உப்பிலியபுரம் சப்-இன்ஸ்பெக்டர்கள் பெரியமணி, செந்தில்குமார் நடத்திய விசாரணையில், மறைத்து வைக்கப்பட்டிருந்த சாவியை எடுத்து வீட்டு கதவின் பூட்டை திறந்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், வீட்டில் இருந்த சாவியை எடுத்து பீரோவை திறந்து, அதில் இருந்த தங்கச்சங்கிலி, 2 தோடுகள் என 3½ பவுன் நகைகள், வெள்ளி குத்துவிளக்கு, ரூ.3 ஆயிரம் உள்ளிட்டவற்றை திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story