மகாமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா
மகாமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நடந்தது.
தொட்டியம்:
தொட்டியம் அருகே உள்ள தோளூர்பட்டியில் மகாமாரியம்மன் மற்றும் பகவதியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 19-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து பிடாரி அம்மனுக்கு மாவிளக்கு பூஜை மற்றும் திருத்தேர் தலையலங்காரம், தீர்த்தக்குடம், அக்னி சட்டி எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் வீதியுலா தொடங்கி நடந்தது. இதில் தோளூர்பட்டியில் உள்ள முக்கிய வீதிகளின் வழியாக பக்தர்கள் தேரை தலையிலும், தோளிலும் சுமந்து சென்றனர். பின்னர் மஞ்சள் நீராட்டு மற்றும் வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்களும், ஊர் முக்கியஸ்தர்களும் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story