ஒரு கிலோ கடத்தல் தங்கம்-எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல்
ஒரு கிலோ கடத்தல் தங்கம்-எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
செம்பட்டு:
அதிகாரிகள் சோதனை
திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த விமான சேவைகள் அனைத்தும் தற்போது தினசரி சேவையாக மாற்றப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. இதில் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் திருச்சியில் இருந்து வெளிநாடுகளுக்கு வியாபார பயணமாக செல்லும் பலர், அங்கிருந்து திரும்பும்போது தங்கம் கடத்தி வருவது தொடர்கதையாக உள்ளது. அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று காலை சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் இண்டிகோ விமானங்கள் திருச்சி வந்தன. இதேபோல் சார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானங்களில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
தங்கம்-எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல்
இதில் 3 விமானங்களிலும் பயணம் செய்த 26 பயணிகளிடம் சோதனை மேற்கொண்டதில், அவர்களிடம் இருந்து சுமார் ஒரு கிலோ கடத்தல் தங்கம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணை முடிவில், பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் குறித்த விவரம் வெளியிடப்படும் என்று தெரிகிறது.
Related Tags :
Next Story