முருகன் கோவிலுக்கு காவடி எடுத்து பக்தர்கள் ஊர்வலம்


முருகன் கோவிலுக்கு காவடி எடுத்து பக்தர்கள் ஊர்வலம்
x
தினத்தந்தி 2 May 2022 5:25 AM IST (Updated: 2 May 2022 5:25 AM IST)
t-max-icont-min-icon

முருகன் கோவிலுக்கு காவடி எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்.

கல்லக்குடி:
புள்ளம்பாடி ஒன்றியம் ரெட்டிமாங்குடி கிராமத்தில் உள்ள முருகன் கோவிலுக்கு 69-ம் ஆண்டு அன்னக்கொடி திருவிழா, நேற்று முன்தினம் இரவு சிறுதொண்டர் கதையுடன் தொடங்கியது. நேற்று காலை ஏரிக்கரையில் இருந்து சக்தி அழைப்பு செய்து பக்தர்கள் சக்தி காவடி, பால்குடம், சின்ன காவடி, பெரிய அலகுகளுடன் காவடிகள் எடுத்து ேகாவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். குழந்தை பாக்கியம் வேண்டுதல் மற்றும் பில்லி சூனியம், குடும்ப பிரச்சினைகள், கண் திருஷ்டி நீக்குவது ெதாடர்பாக பூசாரிகள் அருள்வாக்கு கூறினார்கள். விழாவையொட்டி கோவில் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஆங்காங்கே பக்தர்களுக்கு நீர்மோர், அன்னதானம் வழங்கப்பட்டது.

Next Story